/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேனுக்கும் ஏ.சி.,க்கும் வேலை அதிகரித்து விட்டது மின் நுகர்வு
/
பேனுக்கும் ஏ.சி.,க்கும் வேலை அதிகரித்து விட்டது மின் நுகர்வு
பேனுக்கும் ஏ.சி.,க்கும் வேலை அதிகரித்து விட்டது மின் நுகர்வு
பேனுக்கும் ஏ.சி.,க்கும் வேலை அதிகரித்து விட்டது மின் நுகர்வு
ADDED : பிப் 03, 2025 04:07 AM
கோவை : இனிவரும் நாட்களில் வெயில் காரணமாக, மின்நுகர்வு அதிகரிக்கும் என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுவாக, குளிர், மழை காலங்களில் மின் நுகர்வு குறைவாகவும், வெயில் காலங்களில் அதிகரித்தும் காணப்படும். அதன்படி, 2023 டிச., மாதம் அதிகபட்ச மின்நுகர்வு 2,654 மெ.வாட்., ஆகவும், 2024 ஜன.,மாதம் அதிகபட்ச மின்நுகர்வு 2,667 மெ.வாட்., ஆகவும் இருந்தது. தொடர்ந்து, 2024 ஏப்., மாதம் 2,879 மெ.வாட்., ஆகவும், 2025 ஜன., மாதம் 2,777 மெ.வாட் ஆகவும் பதிவாகியுள்ளது.
கோவை மண்டல தலைமை பொறியாளர் குப்புராணி கூறுகையில், ''குளிர் போய் வெயில் துவங்கி விட்டது. வெயில் காலங்களில் பொதுவாக, மின் நுகர்வு அதிகமாக இருக்கும்.
கடந்த மே மாதம், அதிகபட்ச நுகர்வாக 2,900 மெ.வாட்., ஆக பதிவாகியுள்ளது. எதிர்வரும் கோடைக்காலத்தில், 3,000 மெ.வாட்., ஆக பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.