/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஈஷாவில் கோலாகலமாக துவங்கிய யக்க்ஷா திருவிழா
/
ஈஷாவில் கோலாகலமாக துவங்கிய யக்க்ஷா திருவிழா
ADDED : மார் 06, 2024 01:50 AM

தொண்டாமுத்தூர்:கோவை ஈஷா யோகா மையத்தில், மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, மூன்று நாட்கள் கொண்டாடப்படும் யக்க்ஷா கலை திருவிழா, கோலாகலமாக துவங்கியது.
கோவை ஈஷா யோகா மையத்தில், 30ம் ஆண்டு மஹா சிவராத்திரி விழா, வரும், 8ம் தேதி, மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.
இதை முன்னிட்டு, இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக நடத்தப்படும் 'யக்க்ஷா' கலை திருவிழா நேற்று துவங்கியது.
இந்நிகழ்ச்சி, கலாசாரம், இசை மற்றும் நடனத்தின் செறிவை பறைசாற்றும் விதமாக உலக புகழ்பெற்ற கலைஞர்களை கொண்டு நடத்தப்படுகிறது. இந்தாண்டு, நேற்று துவங்கிய, கலை திருவிழா நாளை நிறைவு பெறும்.
இவ்விழாவின் துவக்க நிகழ்ச்சியாக, நேற்று இந்துஸ்தானி இசைக்கலைஞர் பண்டிட் சஞ்சீவ் அப்யங்கரின் இசை நிகழ்ச்சி நடந்தது.
இவர், உலக அளவில் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். இவர் நிகழ்த்திய இசை விருந்தில், அஜிங்யா ஜோஷி (தபலா), அபிஷேக் ஷிங்கர் (ஆர்மோனியம்), சாய் பிரசாத் பாஞ்சல் (தம்பூரா) உள்ளிட்ட புகழ் பெற்ற இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். இன்று, வித்வான் குமரேஷ் குழுவினரின் வயலின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

