நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்;திம்மநாயக்கன்புதுார் மகா பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா இன்று நடக்கிறது.
மொண்டிபாளையம் அருகே திம்மநாயக்கன்புதூரில், மகா பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது.
இன்று மாலை 6:00 மணிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
இதையடுத்து அலங்கார பூஜை, வேள்வி பூஜை நடக்கிறது. பக்தர்கள் விழாவில் பங்கேற்று இறையருள் பெற கோவில் கமிட்டியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.