/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு போதிய பயிற்றுனர்கள் இல்லை
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு போதிய பயிற்றுனர்கள் இல்லை
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு போதிய பயிற்றுனர்கள் இல்லை
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு போதிய பயிற்றுனர்கள் இல்லை
ADDED : ஆக 21, 2025 09:26 PM
கோவை; கோவை மாவட்டத்தில், 2025-26 கல்வியாண்டில், இதுவரை 4,900க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்பருவ வகுப்புகளில் (எல்.கே.ஜி - யு.கே.ஜி) மட்டும், 40 மாணவர்கள் தற்போது பயில்கின்றனர்.
எண்ணும் எழுத்தும் திட்டம் மூலம் அரும்பு, மொட்டு, மலர் என மூன்று நிலைகளாக பிரித்து, செயல்வழிக் கற்றல் முறையில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன.
அவர்களது கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், நடப்பு கல்வியாண்டில், 4 மற்றும், 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, எளிமைப்படுத்தப்பட்ட அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
மாற்றுத்திறன் மாணவர்களுக்காக கோவை நகரம், பேரூர், எஸ்.எஸ்.குளம், காரமடை, சூலுார் உள்ளிட்ட, 15 வட்டாரங்களில் பகல்நேர மையங்கள் செயல்படுகின்றன. இங்கு பயில்வோருக்கு கற்றல் பயிற்சி வழங்க, தொகுப்பூதியத்தில் 63 பயிற்றுநர்கள், 9 பிசியோதெரபிஸ்ட்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
இச்சூழலில், பகல்நேர மையங்களில் போதிய பயிற்றுனர்கள், பிசியோதெரபிஸ்ட்கள் இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பயிற்றுனர்கள் கூறுகையில், 'பள்ளிகள் மற்றும் மையங்களில் பயிலும் குழந்தைகளின் கற்றல் அடைவு நிலையை மதிப்பீடு செய்து, அவர்களுக்கேற்ற சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயிற்றுநர்கள் இல்லை. பணியில் இருப்போரும், 15 வட்டாரங்களில் சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர். சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளை கவனிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் பணிச்சுமை அதிகரிக்கிறது' என்றனர்.

