/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உணவில் நோயும் இருக்கிறது ஆரோக்கியமும் இருக்கிறது!
/
உணவில் நோயும் இருக்கிறது ஆரோக்கியமும் இருக்கிறது!
ADDED : ஜூன் 21, 2025 11:54 PM

'நாம் சாப்பிடும் உணவில் நோயும், ஆரோக்கியமும் சேர்ந்தே இருக்கிறது. நாம்தான் நோயை தரும் உணவை நீக்கி, ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும்,'' என்கிறார் கோவை அரசு மருத்துவமனை குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜா சிகாமணி.
நாம் சாப்பிடும் உணவு, சமச்சீரான சத்துள்ள உணவாக இருக்க வேண்டும். உணவில் நான்கு சத்துக்கள் இருப்பது அவசியம். மாவுச்சத்து 40 சதவீதம், புரதச்சத்து 30 சதவீதம், கொழுப்புச்சத்து 15 சதவீதம் மற்றும் விட்டமின்கள், ஐந்து சதவீதம் இருக்க வேண்டும்.
இது போன்ற உணவு சாப்பிட்டால் மட்டும் போதாது, அதை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். காலம் கடந்து, நேர மற்ற நேரத்தில் சாப்பிடுவதால் அஜீரண பிரச்னை ஏற்படும். வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவரவர் முடிந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
சரியான நேரத்துக்கு துாங்கி, அதிகாலை எழும் பழக்கம் வழக்கமாக இருப்பது நல்லது. சிலர் கொழுப்பு சத்தை தவிர்த்து வருகின்றனர், அது தவறாகும். நம் உடலுக்கும், 15 சதவீத கொழுப்பு அவசியம். உடலுக்கு தேவையான எனர்ஜி கொழுப்பில் இருந்துதான் கிடைக்கிறது.
நாம் சாப்பிடும் உணவில் நோயும், ஆரோக்கியமும் சேர்ந்தே இருக்கிறது. நாம்தான் நோயை தரும் உணவை நீக்கி, ஆரோக்கியமான உணவை சாப்பிடவேண்டும். அதனால்தான் உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள்.
இவ்வாறு, அவர் கூறினார்.