/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வளர்ச்சிப்பணிகளில் தடங்கல் கிடையாது'
/
'வளர்ச்சிப்பணிகளில் தடங்கல் கிடையாது'
ADDED : ஜூன் 05, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளில் தொய்வுகள் ஏதும் இல்லை; நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருவதாக, கலெக்டர் தெரிவித்தார்.
இது குறித்து கலெக்டர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள், தொய்வின்றி நடந்து வருகின்றன. மழைகாலத்தில் பேரிடர் மேலாண்மை பணி சிறப்பாகவும், துரிதமாகவும் மேற்கொள்ளப்பட்டது. கனிமவளக்கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும், தொடர்ந்து வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு, கலெக்டர் கூறினார்.