/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பர்ச்சேஸ்' வந்தாலும் நிம்மதியில்லை; 'பார்க்கிங்' இன்றி மக்கள் தவிப்பு
/
'பர்ச்சேஸ்' வந்தாலும் நிம்மதியில்லை; 'பார்க்கிங்' இன்றி மக்கள் தவிப்பு
'பர்ச்சேஸ்' வந்தாலும் நிம்மதியில்லை; 'பார்க்கிங்' இன்றி மக்கள் தவிப்பு
'பர்ச்சேஸ்' வந்தாலும் நிம்மதியில்லை; 'பார்க்கிங்' இன்றி மக்கள் தவிப்பு
ADDED : அக் 28, 2024 12:34 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில், தீபாவளி பண்டிகைக்குப் பொருட்களை வாங்க, மாலை நேரத்தில் வரும் மக்கள், தங்களது வாகனங்களை நிறுத்த இடமின்றி தவிக்கின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு 2 நாட்களே உள்ள நிலையில், பொள்ளாச்சி நகரில், முன்னணி கடைகள், ேஷாரூம்களில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறுவர், சிறுமியர், ஆண்கள்-, பெண்கள் என, அனைத்து வயதினருக்கும், விதவிதமான ஆடைகள், ஜவுளிக்கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஜவுளிக் கடையும், 10 முதல் 30 சதவீதம் தள்ளுபடி விலையில், தீபாவளி விற்பனையை துவக்கி உள்ளதால், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதேபோல, மொபைல்போன்கள், பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனையிலும், 'எக்சேஞ்ச்' மற்றும் ஜீரோ சதவீத வட்டியுடன் தவணை முறை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் குடும்பத்தாருடன் நகருக்கு வருகை புரிகின்றனர்.
ஆனால், பெரும்பாலான ஜவுளிக்கடை, எலக்ட்ரானிக் கடைகள், ேஷாரூம்களில் 'பார்க்கிங்' வசதி இல்லததால், வாடிக்கையாளர்கள், ரோட்டை ஒட்டியே தங்களது வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கடைவீதிக்குள் செல்வோர், ஏதேனும் ஒரு இடத்தில் தங்களது வாகனங்களை 'பார்க்கிங்' செய்து, நடந்து சென்று திரும்புகின்றனர்.
மக்கள் கூறுகையில், 'வியாபாரம் செய்ய முற்படும் உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள் வசதியை கருத்தில் கொள்வது கிடையாது. முன்னணி கடைகளிலேயே டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த 'பார்க்கிங்' கிடையாது.
மழை பெய்தால், வாங்கிய பொருட்களுடன் சிறிது துாரம் நனைந்தவாறு செல்ல வேண்டியுள்ளது. குழந்தைகளுடன் வருவோர் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்,' என்றனர்.

