/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டோர மரங்களை வெட்டி வீழ்த்தறாங்க!
/
ரோட்டோர மரங்களை வெட்டி வீழ்த்தறாங்க!
ADDED : அக் 08, 2025 11:11 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரின் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும், அதிக எண்ணிக்கையில் மரங்கள் வளர்க்கப்பட்டு பசுமையாக காட்சியளிக்கிறது.
குறிப்பாக, ரோட்டோரம், பூவரசு, வாகை, நாவல், பசுமை தரும் வேம்பு, குளிர்ச்சி தரும் புங்கை என பல்வேறு மரங்கள் காணப்படுகின்றன.
ஆனால், பல பகுதிகளில் வணிகக் கடைகள், வீடுகளுக்கு முன் இருக்கும் மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றுவதன் பேரில், மரத்தையே இருந்த இடம் தெரியாமல் அழித்து வருகின்றனர்.
குறிப்பாக, இரவோடு இரவாக மரங்களின் கிளைகளும் வெட்டி அகற்றப்படுகிறது. மின் கம்பி உள்ளிட்ட எந்த பிரச்னையும் இல்லாத நிலையில், மரம் வெட்டி அகற்றப்படும் செயல் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.