/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியில் கவனம் செலுத்தறாங்க!
/
கிராம பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியில் கவனம் செலுத்தறாங்க!
கிராம பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியில் கவனம் செலுத்தறாங்க!
கிராம பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியில் கவனம் செலுத்தறாங்க!
ADDED : ஜூலை 07, 2025 10:58 PM
பொள்ளாச்சி; கிராமங்களில், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், தீவிர கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்டு, 65 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு, பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் நிலையில், குறைந்த எண்ணிக்கையிலேயே கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணியில் உள்ளனர்.
தற்போது மழையின் தாக்கம் உள்ளதால், தினமும் மழை நீர் வடிகால்கள், குடியிருப்புகள் தோறும் 'அபேட்' மருந்து தெளித்தும், கொசுப்புகை பரப்பியும் வருகின்றனர்.
இவ்வாறு பணிகள் மேற்கொண்டாலும், கொசுக்களின் உற்பத்தியை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், எவருக்கேனும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அங்கு மருத்துவ முகாம் அமைக்கப்படுகிறது.
மேலும், கொசுப்புழு வளரிடங்களை கண்டறிந்து, அதனை அழிக்கும் வகையில், வீரியமிக்க மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பொது இடங்களில், தேவையற்ற டயர்கள், டியூப்கள் மற்றும் பழைய வாகனங்கள் அகற்றப்பட்டு, தீவிர துாய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது.
சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'தற்போது வரை, டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை. தொடர் மழை காரணமாக, வீடுகளில் கொசுப்புழு வளரிடங்களை கண்டறிந்து அழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,' என்றனர்.