/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தையல்நாயகி, வைத்தீஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்
/
தையல்நாயகி, வைத்தீஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்
ADDED : ஜன 30, 2024 12:26 AM
கோவை;வெள்ளலுார், சக்தி விநாயகர் நகரில் உள்ள சக்தி விநாயகர், தையல் நாயகி உடனமர் வைத்தீஸ்வரர் கோவிலில், 6ம் ஆண்டு விழா நடந்தது.
காலை 9:00 மணிக்கு கோ பூஜையுடன் தொடங்கிய விழாவில், உற்சவர்களுக்கு மகா வேள்வி நடந்தது. பக்தர்கள் பங்கேற்று, 108 வேள்வி பொருட்களை வழங்கினர்.
பின்னர், 108 சங்கபிஷேகமும், அதில் உள்ள தீர்த்தங்களைக் கொண்டு வைத்தீஸ்வரர் மற்றும் தையல்நாயகிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடந்தன. மாலையில், தையல்நாயகி உடனமர் வைத்தீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்தது.
ஆகம விதிகளின்படி, சிவாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன், சத்தியநாராயணன், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் செந்தில், கார்த்திகேயன் மற்றும் மகளிர் வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.