/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோற்றுத்துறைநாதர் கோவிலில் வரும் 30ல் திருக்குட நன்னீராட்டு
/
சோற்றுத்துறைநாதர் கோவிலில் வரும் 30ல் திருக்குட நன்னீராட்டு
சோற்றுத்துறைநாதர் கோவிலில் வரும் 30ல் திருக்குட நன்னீராட்டு
சோற்றுத்துறைநாதர் கோவிலில் வரும் 30ல் திருக்குட நன்னீராட்டு
ADDED : ஏப் 21, 2025 04:55 AM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகர் சோற்றுத்துறைநாதர் கோவிலில் வரும் 30ம் தேதி திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது.
கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகரில் அன்னபூரணி அம்மை உடனமர் சோற்றுத்துறைநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகிலுள்ள கல்லாங்காட்டுப்புதுார், சிங்கராம்பாளையம், லட்சுமிநகர், கொண்டம்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் வருகை தருவர்.
கோவிலில்,திருக்குட நன்னீராட்டு விழா நிகழ்ச்சிகள், 28ம் தேதி துவங்குகிறது. அன்று, காலை, 5:00 மணிக்கு, திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, விநாயகர், நிலத்தேவர் வழிபாடு நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு, வேள்வி நிறைவு, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு நடக்கிறது.
வரும், 29ம் தேதி, காலை ஐங்கரன் வேள்வி வழிபாடு, மண்ணெடுத்தல், முளையிடுதல், காப்பணிவித்தல் நடக்கிறது. மாலையில், முதற்கால வேள்வி நடக்கிறது. 30ம் தேதி, அதிகாலை 4:30 மணிக்கு, திருப்பள்ளியெழுச்சி, சுற்று பூஜைகள் நடக்கிறது. காலை 7:00 மணிக்கு, இரண்டாம் கால வேள்வி, 9:00 மணிக்கு திருக்கலசப் புறப்பாடு, 9:30 மணிக்கு விமானம் மற்றும் மூலமூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு, அன்னதானம் நடக்கிறது. மாலையில், சுவாமி திருக்கல்யாணம் உற்சவம், இரவு சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

