ADDED : பிப் 23, 2024 12:15 AM

'ரெடிலிங்க் இன்டர்நெட் சர்வீசஸ் லிமிடெட்' நிறுவனம், கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தமிழகம் முழுவதும் கடந்த 21 ஆண்டுகளாக இணைய சேவையை அளித்து வருகிறது.
கடந்த 2016ம் ஆண்டு முதல் கோவை மாவட்டத்தில் அதிவேக பைபர் பிராட்பேண்ட் இணைய சேவை வழங்குவதில் சிறந்து விளங்குகிறது.
இணைய சேவையுடன் லேண்ட்லைன், தொலைபேசி இணைப்பு, சன்நெக்ஸ், ஜீ5 போன்ற ஓ.டி.டி., சேவைகளும் வழங்கி வருகின்றது. தற்போது ரெடிலிங்க் நிறுவனம், தனது அதிநவீன ஐ.பி.டி.வி., எனும் இன்டர்நெட் புரோட்டோகால் டெலிவிஷன் சேவையை கோவையில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இது, கேபிள் 'டிவி'க்கு மாற்றாக, உயர்தர தொலைக்காட்சி உள்ளடக்கத்தை இணையம் வழியாக, நேரிடையாக பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தனது வாடிக்கையாளர்களுக்கு, ஏழு நாட்களுக்கு ஐ.பி.டி.வி.,சேவையை இலவசமாக வழங்க ரெடிலிங்க் முடிவு செய்துள்ளது. விருப்பபடும் வாடிக்கையாளர்கள் ரெடிலிங்க் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
- கேலக்சி சக்தி காலனி, ஆர்.கே.,புரம், கணபதி.
- 0422 - 429 9300, 88709 00011