UPDATED : நவ 07, 2026 05:21 PM
ADDED : நவ 07, 2026 03:49 PM

அ நிறம் | அளவு
கோவை: வடகோவையில் உள்ள காமராஜர் பூங்காவில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் காமராஜர் சிலைக்கு, எட்டு ஆண்டுகளாக தினமும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார் வேலுமயில் என்பவர்.
இன்று (நவ.,7) 2,596வது நாளாக மாலை அணிவிப்பதாக கூறிய இவர், தீபாவளியை முன்னிட்டு பூங்காவில் பணிபுரியும் ஒன்பது பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்வித்தார்.
''சிறு வயதில் பள்ளியில் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தின் வாயிலாக பயனடைந்ததால், அவர் மீது சொல்லத் தெரியாத பாசம் ஏற்பட்டு விட்டது. இதனால் காமராஜர் நற்பணி மன்றத்தைத் தொடங்கி சமூக சேவைகள் செய்து வருகிறேன்'' என்றார்.
பா.ஜ.,கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மாநில பொறுப்பாளர் என்பது போனஸ் தகவல்.
