தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2026 :இந்த வாரம் ஆரவாரம்

'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2026 :இந்த வாரம் ஆரவாரம்

'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2026 :இந்த வாரம் ஆரவாரம்


UPDATED : ஆக 13, 2026 07:38 PM

ADDED : ஆக 13, 2026 07:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 13, 2026 07:38 PM ADDED : ஆக 13, 2026 07:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2026 கோவையில் 'தினமலர்' நாளிதழின் மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி ஆகஸ்ட் 14ல் துவங்குகிறது. 4 நாட்கள் நடக்கும் கண்காட்சியில், வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் வாங்கலாம். பல பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன. குழந்தைகளை மகிழ்விக்க எண்ணற்ற விளையாட்டுகள் உள்ளன. விதவிதமான உணவு ஐட்டங்களை சுவைத்து மகிழலாம்.

இடம்: கொடிசியா வணிக வளாகம்.தேதி: -14 முதல்- 17 ம் தேதி வரை: பகவத்கீதை சத்சங்கம் ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலம் சார்பில், ஆச்சாரியர்கள் வழங்கும் பகவத்கீதை சத்சங்கம் நடக்கிறது. இதில் ஆச்சாரியார்கள் டக்டர் செந்தில்முருகன், ராஜரத்தினம், சுமதி, சுவாமி பூமாசங்கரானந்தி, ராதாதேவி, மாரிராஜன், காந்திநாதன் ஆகியோர் பங்கேற்று பகவத்கீதை சொற்பொழிவு நிகழ்த்துகின்றனர்.

இடம்: ஆத்ம வித்யாலயம்: கல்வி விழா ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் 'கற்கை நன்றே' - கல்வி விழா நடக்கிறது. கல்வியில் சிறந்து விளங்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை கண்டறிந்து, அவர்களது உயர்கல்வி கனவை நனவாக்க உதவுதல். மாணவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்குவித்து, சாதனையாளர்களாக உருவாக்குதல் இந்த விழாவின் நோக்கமாகும்.

இடம்: ஆனந்த சைதன்யா தியானமையம்: தபால் தலைகள் கண்காட்சி கோவை மாவட்ட தபால் சேகரிப்பாளர்கள் நடத்தும் தபால் தலைகள் கண்காட்சி நடக்கிறது. இதில் தபால் துறை தோன்றிய காலத்தில் வெளியிடப்பட்ட பழங்கால தபால் தலைகள், முத்திரைகள், தபால் உறைகள் என, 5000 க்கும் மேற்பட்ட தபால் சம்பந்தமான ஆவணங்கள் இடம் பெற்றுள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் பார்வையிடலாம்.

இடம்: நேஷனால் மாடல் பள்ளி அரங்கம் பன்மால் பின்புறம்தேதி: 13 முதல் 15 ம் தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 4:00 மணி வரை:

ரத்ததானம் சக்சம் மாற்றுத்திறனாளிகள் நலம் விரும்பும் தேசிய அமைப்பு சார்பில், 80- வது சுதந்திர தின விழா மற்றும் சிறப்பு ரத்த தான முகாம் நடக்கிறது. நீங்கள் அளிக்கும் ஒரு துளி ரத்தம், பல உயிர்களுக்கு புதிய வாழ்வு அளக்கும். விருப்பம் உள்ளவர்கள் ரத்ததானம் வழங்கலாம்.

இடம்: சக்சம் அலுவலகம்:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us