/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் அரிசி வழக்கில் ஈடுபட்டவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

ADDED : செப் 05, 2025 10:00 PM
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகளில், துாத்துக்குடியை சேர்ந்த மணிகண்டன், 32, டி. கோட்டாம்பட்டி லோகநாதன், 33, திண்டுக்கல் பிச்சைமுத்து, பொள்ளாச்சி லோகநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் கோவை குற்றவியல் நீதித்துறை நடுவர் எண், 4ல் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தவர்கள் மீது, குற்றம் சாட்டப்பட்ட நீதிமன்றத்தில் நேரிலோ, வக்கீல் வாயிலாகாவோ ஆஜராகும்படி குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.
பொள்ளாச்சி குடிமைப்பொருள் போலீசார், சம்மன் வழங்க சம்பந்தப்பட்ட முகவரிகளுக்கு சென்ற போது அவர்கள் அங்கு வசிக்கவில்லை. அவர்கள் குறித்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வரும், 8ம் தேதி நீதிமன்றத்தில், நேரடியாகவோ, வக்கீல் மூலமாகவோ ஆஜராக உத்தரவு குறித்து அறிவிப்பு செய்தும், தவறும் பட்சத்தில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து நீதிபதி உத்தரவு பிறப்பிபார்.