ADDED : டிச 23, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம் : நெகமம் பகுதியில், 'கள்' விற்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிணத்துக்கடவு அருகே நெகமம் பகுதியில் சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது,
இதைத்தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், சாலைப்புதுார் பகுதியில் சின்னத்தம்பி, 52, விவசாயி என்பவரிடமிருந்து, 5 லிட்டர் கள் மற்றும் ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த நாச்சிமுத்து, 44, விவசாயி என்பவரிடமிருந்து. 5 லிட்டர் கள் என மொத்தம், 10 லிட்டர் கள்ளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கள் விற்ற இவர்களை கைது செய்து, வழக்கு பதிந்துள்ளனர்.

