sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

துணை தேர்வில் வென்றவர்களும் வேளாண் பல்கலையில் சேரலாம்

/

துணை தேர்வில் வென்றவர்களும் வேளாண் பல்கலையில் சேரலாம்

துணை தேர்வில் வென்றவர்களும் வேளாண் பல்கலையில் சேரலாம்

துணை தேர்வில் வென்றவர்களும் வேளாண் பல்கலையில் சேரலாம்


ADDED : ஆக 07, 2025 09:45 PM

Google News

ADDED : ஆக 07, 2025 09:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்வானவர்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலை இளம் அறிவியல் மற்றும் டிப்ளமோ மாணவர் சேர்க்கைக்கு வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பல்கலை மாணவர் சேர்க்கை டீன் வெங்கடேச பழனிசாமி அறிக்கை:

தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலை வேளாண் பிரிவுக்கு, இளம் அறிவியல் மாணவர் சேர்க்கை, டிப்ளமோவுக்கு, பிளஸ் 2 துணைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வரும் 20ம் தேதி வரை http://tnau.ucanapply.com என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

பொதுக்கலந்தாய்வுக்குப் பிறகு உள்ள காலியிடங்கள், இந்த துணைக் கலந்தாய்வின் வாயிலாக நிரப்பப்படும்.

ஏற்கனவே விண்ணப்பித்து, தரவரிசை பட்டியலில் இடம்பெற்றவர்கள் விண்ணப்பிக்கக்கூடாது. இதுவரை சமர்ப்பிக்காதவர்கள், சமர்ப்பித்து பாதியில் நிறுத்தியவர்கள், துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தனி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு வேளாண் பல்கலையை 9488635077 என்ற எண்ணிலும், அண்ணாமலை பல்கலையை 865703537 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us