/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.ஐ.,யை கத்தியால் குத்தியவர்களுக்கு பல்வேறு வழக்குகளில் தொடர்பு
/
எஸ்.ஐ.,யை கத்தியால் குத்தியவர்களுக்கு பல்வேறு வழக்குகளில் தொடர்பு
எஸ்.ஐ.,யை கத்தியால் குத்தியவர்களுக்கு பல்வேறு வழக்குகளில் தொடர்பு
எஸ்.ஐ.,யை கத்தியால் குத்தியவர்களுக்கு பல்வேறு வழக்குகளில் தொடர்பு
ADDED : ஜன 28, 2025 07:54 AM

கோவை : போலீஸ் எஸ்.ஐ., கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு, பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
கோவை, காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் குற்றப்புலனாய்வு எஸ்.ஐ., கார்த்திகேய பாண்டியன் உள்ளிட்ட போலீசார், காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில், கடந்த 24ம் தேதி இரவு சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு பையுடன் நின்றிருந்த மூவரை, சோதனை செய்ய முயன்றனர். மூவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களில் ஒருவர், எஸ்.ஐ., கார்த்திகேய பாண்டியனை கத்தியால் குத்தி தப்பினார். இதில் அவருக்கு மூக்கு மற்றும் உதட்டில் காயம் ஏற்பட்டது.
விசாரணையில், மூவரும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆல்பின் தாமஸ், 19, திருச்சூரை சேர்ந்த முகமத் சுவாலி, 19 மற்றும் தக்ரு, 19 எனத் தெரிந்தது.
இவர்கள் மீது, கேரள மாநில போலீஸ் ஸ்டேஷன்களில், கஞ்சா கடத்தல், அடிதடி உள்ளிட்ட, 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும், கேரளாவில் கலால் அலுவலர் ஒருவரை தாக்கிவிட்டு, கோவைக்கு தப்பி வந்ததும் தெரிந்தது.
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் திட்டத்துடன், கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்துள்ளனர். அங்குள்ள மதுக்கடையில் மது அருந்தியதால் பணம் காலியானது. பயணிகளிடம் திருட நின்றிருந்த போது, போலீஸ் சோதனை நடந்துள்ளது.
இந்நிலையில், ரத்தினபுரி டெக்ஸ்டூல் மேம்பாலத்தில் நின்றிருந்த ஆல்பின் தாமஸ், முகமது சுவாலி ஆகியோரை ரோந்து போலீசார் பிடிக்க முயன்றனர். பாலத்தில் இருந்து குதித்து, தப்ப முயன்றபோது இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அவர்களை, போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்கள் பையில் இருந்த, கத்திகள், மயக்க ஸ்பிரே ஆகியவற்றை, போலீசார் கைப்பற்றினர். தலைமறைவாக உள்ள தக்ருவை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

