/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதியவரிடம் ரூ.29.88 லட்சம் மோசடி செய்த மூவர் கைது
/
முதியவரிடம் ரூ.29.88 லட்சம் மோசடி செய்த மூவர் கைது
முதியவரிடம் ரூ.29.88 லட்சம் மோசடி செய்த மூவர் கைது
முதியவரிடம் ரூ.29.88 லட்சம் மோசடி செய்த மூவர் கைது
ADDED : அக் 27, 2025 01:03 AM

கோவை: கோவையை சேர்ந்த, 62 வயது முதியவர், சென்னையில் அரசு தலைமை இன்ஜினியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஏப்ரலில் இவரது மொபைல்போனில் பேசிய நபர்கள், பல கோடி ரூபாய் மோசடியில், அவரது ஆதார் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கைது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறி மிரட்டினர்.
ஒரு கட்டத்தில், முதியவரை விடுவிக்க பணம் கேட்டதாக தெரிகிறது. பயந்துபோன முதியவர், அவர்களது வங்கிக்கணக்கிற்கு, 29.88 லட்சம் ரூபாய் அனுப்பினார். பின், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம், புகார் அளித்தார்.
போலீசார் விசாரணையில், முதியவர் பணம் அனுப்பிய வங்கிக்கணக்கில் இருந்து, மற்றொரு வங்கிக்கணக்கிற்கு, 6 லட்சம் ரூபாய் மாற்றப்பட்டு, எடுக்கப்பட்டது தெரிந்தது. போலீசார், அந்த வங்கிக்கணக்கின் விபரங்களை விசாரித்தனர். அது, முதியவரிடம் ஆன்லைனில் மோசடி செய்தவர்களின் வங்கிக்கணக்கு என தெரிந்தது.
இது தொடர்பாக, கேரள மாநிலம், மறையூரைச் சேர்ந்த நபீல், 30, முகமது ஹரிஸ், 34, முகமது ரமீஸ், 28, ஆகிய மூவரை கைது செய்தனர்.

