ADDED : அக் 03, 2024 11:54 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு சுற்றுப்பகுதிகளில் மது விற்பனை நடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இதில், ஆர்.எஸ்.,ரோடு டாஸ்மாக் கடை அருகாமையில், சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், 43, என்பவரிடம் இருந்து, 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சொக்கனூர் ரோடு கல்லுக்குழி அருகே உள்ள டாஸ்மாக் கடை பகுதியில், புதுக்கோட்டையை சேர்ந்த ஸ்ரீகாந்த், 21, என்பவரிடம் இருந்து, 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இம்மிடிபாளையம் ரயில்வே கேட் அருகே உள்ள டாஸ்மாக் கடை பகுதியில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சுதாகர், 43, என்பவரிடம், 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு பகுதியில் மூன்று டாஸ்மாக் கடை அருகே, மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.