/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கத்தியை காட்டி போன்கள் கொள்ளை; மூவர் கைது
/
கத்தியை காட்டி போன்கள் கொள்ளை; மூவர் கைது
ADDED : அக் 26, 2025 07:42 PM
பெ.நா.பாளையம்: நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிம்சாம், 20. இவர், கூடலூர் கவுண்டம்பாளையம் விஜயலட்சுமி நகர், மணி மேன்சனில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் நண்பர்கள் காட்சன், ஆதர்ஷ், ஆல்பின், அர்ஜுன், ஸ்ரீஜித், அபிநந்த், ஜோஸ்வா, அபினவ் ஆகியோர் தங்கி கல்லூரி சென்று வருகின்றனர்.
கடந்த 10ம் தேதி நள்ளிரவு உறங்கிக் கொண்டிருந்த போது, சுபாஷ் கண்ணன் மற்றும் அடையாளம் தெரியக்கூடிய ஐந்து நபர்கள், அறைக்குள் அத்துமீறி நுழைந்து, சிம்சாம் கழுத்தின் மீது கத்தியை வைத்து மிரட்டி, நண்பர்களின் ஒன்பது மொபைல் போன்கள் மற்றும் ஜிபே பாஸ்வேர்டுகளை, மிரட்டி பறித்து சென்றனர்.
புகாரின்படி, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மொபைல் போன்களை கொள்ளையடித்துச் சென்ற சிவகங்கை சுபாஷ் கண்ணன்,19, மானாமதுரை பிரவீன் சந்தோஷ்,19, மகேஸ்,19, ஆகியோரை கைது செய்தனர். ஐந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 3 சிறார்களை கைது செய்து, இளம் சிறார் நீதி குழுமத்தில் ஒப்படைத்தனர்.

