/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காங்.,கட்சி சார்பில் முப்பெரும் விழா
/
காங்.,கட்சி சார்பில் முப்பெரும் விழா
ADDED : ஜன 11, 2024 12:24 AM
போத்தனூர் : கோவை தெற்கு மாவட்ட காங், கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில், கட்சியின், 139ம் ஆண்டு துவக்கம், புத்தாண்டு மற்றும் பொங்கல் ஆகிய முப்பெரும் விழா, இதர பிற்படுத்தப்பட்டோர் துறை மாவட்ட தலைவர் நடராஜ் தலைமையில் நடந்தது.
மலுமிச்சம்பட்டி, அன்பு நகர் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் நடந்த விழாவில், மாநில துணை தலைவர் காமராஜ், காங்., கமிட்டி தெற்கு மாவட்ட தலைவர் பகவதி ஆகியோர் கட்சி கொடியினை ஏற்றினர். சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு, காலை உணவுடன், 500க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.
வட்டார தலைவர்கள் பழனிசாமி, கண்ணன், அமைப்பு சாரா தொழிலாளர் அணி தெற்கு மாவட்ட தலைவர் சதீஸ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.