/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் வழக்கில் மேலும் மூவர் கைது
/
மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் வழக்கில் மேலும் மூவர் கைது
மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் வழக்கில் மேலும் மூவர் கைது
மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் வழக்கில் மேலும் மூவர் கைது
ADDED : செப் 21, 2024 05:43 AM
போத்தனூர் : மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் வழக்கில், தொடர்புடைய மேலும் மூவரை கரும்புக்கடை போலீசார் கைது செய்தனர்.
கரும்புக்கடை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., வேல்முருகன். கடந்த, 17ல் என்.பி. இட்டேரி பகுதியில் ரோந்து சென்றார். அங்குள்ள ஒரு சர்ச் முன் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நால்வரிடம் விசாரித்தார். அதே பகுதியை சேர்ந்த நவுசாத் சபீக், 35, சபீக்,27, குனியமுத்தூர், காந்தி நகரை சேர்ந்த பஷீர் அகமது, 36, உக்கடம், அண்ணா நகரை சேர்ந்த ஜாபர் சாதிக், 35 என தெரிந்தது. அவர்களிடம் மெத்தாம்பெட்டமைன் எனும் போதை பொருள் 2 கிராம், கஞ்சா, 500 கிராம் இருப்பதும் தெரியவந்தது.
நால்வரையும் கைது செய்ய முற்பட்டபோது, சபீக் தப்பினார். மற்ற மூவரும் கைது செய்யப்பட்டு, போதை பொருள், கஞ்சா, சரக்கு வாகனம், மூன்று மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கு பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்த முனீர், 30, அனாஸ் பாபு, 33, ஒத்தப்பாலத்தை சேர்ந்த முகமது ஹாரிஸ், 32 ஆகியோர் சிக்கினர்.
அவர்களிடமிருந்து, போதை பொருள் மெத்தாம்பெட்டமைன் மூன்று கிராம், மொபைல்போன்கள் மூன்று ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.