ADDED : நவ 25, 2025 06:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜி.என்.மில்ஸ்: ஜி.என்.மில்ஸ் மீனாட்சி கார்டன் மூன்றாவது வீதியை சேர்ந்தவர் பிரகாஷ், 53.
நேற்று முன்தினம், வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவர் முகவரிக்கான வழி குறித்து பிரகாஷிடம் கேட்டனர். பிரகாஷ் வழி கூறிக் கொண்டிருந்தார். அப்போது பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த நபர், பிரகாஷின் மூன்றரை பவுன் செயினை பறித்துக் கொண்டு, அவரை கீழே தள்ளி தப்பினர். பிரகாஷூக்கு காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின்படி, துடியலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

