/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புலி மற்றும் சிறுத்தையின் நகம், பற்கள் விற்பனை
/
புலி மற்றும் சிறுத்தையின் நகம், பற்கள் விற்பனை
ADDED : ஜன 18, 2025 12:10 AM

பாலக்காடு,; பாலக்காடு அருகே, சிறுத்தை, புலியின் நகங்கள், பற்களை விற்பனைக்கு கொண்டு சென்ற, வனத்துறை கண்காணிப்பாளர், முன்னாள் கண்காணிப்பாளர் கையும் களவுமாக பிடிபட்டனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் வனத்துறையின் உளவு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பாலக்காடு மாவட்ட பறக்கும் படை வன அதிகாரி சனூப் தலைமையில் வனத்துறையினரும், உளவு பிரிவும் ஒருங்கிணைந்து, நேற்று மண்ணார்க்காடு பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, பாலக்கயம் பகுதியில் இருந்து ஸ்கூட்டரில் வந்தவர்களை, சோதனை செய்தனர். அவர்களிடம், புலி நகங்கள் - 2, சிறுத்தை நகங்கள் - 12, சிறுத்தை பற்கள் -- 4 ஆகியவை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், ஸ்கூட்டரில் வந்தவர்கள், பாலக்கயம் வாக்கோடன் பகுதியைச் சேர்ந்த வனத்துறை கண்காணிப்பாளர் சுந்தரன், 50, முன்னாள் கண்காணிப்பாளர் சுரேந்திரன், 47, என்பது தெரியவந்தது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் கிடைத்த, சிறுத்தை, புலி நகங்கள், பற்களை, மண்ணார்க்காட்டில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது. தொடர் விசாரணை மற்றும் மேல் நடவடிக்கைக்காக, அவர்கள் மண்ணார்க்காடு வனச்சரக அதிகாரி சுபைரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.