/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் கவனத்துக்கு... பெருநகர வளர்ச்சி குழுமம் தூசு தட்டப்படுமா?
/
முதல்வர் கவனத்துக்கு... பெருநகர வளர்ச்சி குழுமம் தூசு தட்டப்படுமா?
முதல்வர் கவனத்துக்கு... பெருநகர வளர்ச்சி குழுமம் தூசு தட்டப்படுமா?
முதல்வர் கவனத்துக்கு... பெருநகர வளர்ச்சி குழுமம் தூசு தட்டப்படுமா?
ADDED : நவ 05, 2024 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நகர்ப்புறங்களில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த, கட்டுமான திட்ட அனுமதியை விரைவுபடுத்த முடிவு செய்த தமிழக அரசு, கோவை, திருப்பூர், மதுரை, ஒசூர் நகரங்களில் பெருநகர வளர்ச்சி குழுமம் அமைக்க, 2021ல் அறிவிப்பு வெளியிட்டது.
பெருநகர வளர்ச்சி குழுமம் அமைக்க, 2022ல் ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் சிறப்பு அதிகார பணியிடங்கள் உருவாக்கி, தமிழக அரசு உத்தரவிட்டது. அதிகாரிகள் இட மாறுதலாகிச் சென்றதால், பெருநகர குழுமம் அமைப்பில் கிடப்பில் போடப்பட்டு விட்டது. துாசி தட்டி செயலாக்கத்துக்கு கொண்டு வர வேண்டியது கோவைக்கு மிக அவசியம்.