/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்
/
வீட்டில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 08, 2025 09:34 PM

சூலுார்; சூலுார் அடுத்த பாப்பம்பட்டியில் ஒரு வீட்டில், குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக, இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார், சுதா கார்டன் பகுதியில் சோதனை செய்தார். அப்போது, ஒரு வீடு திறந்து இருந்தது. ஆட்கள் யாரும் இல்லை. சந்தேகமடைந்த போலீசார், உள்ளே சென்று பார்த்தபோது, ஒரு அறை மட்டும் பூட்டப்பட்டிருந்தது.
வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டு வரவழைத்தனர். பூட்டப்பட்டிருந்த அறையை திறந்து பார்த்தபோது, மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது. 400 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வீட்டு உரிமையாளர் கோபிநாத்திடம் விசாரித்ததில், ஒரு மாதத்துக்கு முன், இரு வாலிபர்கள் குடும்பத்துடன் வந்து வீடு வாடகைக்கு கேட்தாகவும், மளிகை கடை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். அதை நம்பிய உரிமையாளர் வீட்டை வாடகைக்கு கொடுத்தது தெரிந்தது. அந்த வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.