/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில் இன்றும், நாளையும் திறன் தேடல் நிகழ்ச்சி

ADDED : டிச 24, 2024 07:10 AM
கோவை; தமிழ்நாடு தெற்கு ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், கோவையில் இன்றும் (டிச., 24), நாளையும் (டிச., 25), மாநில அளவிலான, பாலவிகாஸ் மாணவர்களின் திறன் தேடல் நிகழ்ச்சி நடக்கிறது.
தமிழ்நாடு தெற்கு ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் பாலவிகாஸ் மாணவர்களுக்கு திறன் தேடல் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்; 5 முதல், 13 வயது குழந்தைகளுக்காக நடத்தப்படும். இவ்வாண்டு கோவையில் நடத்தும் நிகழ்ச்சியில், 750 குழந்தைகள் பங்கேற்கின்றனர். 33 பிரிவுகளில் தனிப்பட்ட மற்றும் குழு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
உரையாடல், ஓவியம் வரைவது, பக்தி பாடல்கள் மற்றும் வேத மந்திரங்களை பாடுவது, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், ஸ்ரீசத்ய சாய் பாலவிகாஸ் பாடத்திட்டம் அடிப்படையிலான தலைப்புகளில், பாடல்கள் பாடுவது போன்றவை அடங்கும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சி, கோவை, நவ இந்தியா அருகே ஆவராம்பாளையம் ரோட்டில் எஸ்.என்.ஆர்., அரங்கத்தில், இன்றும் (டிச., 24), நாளையும் (டிச., 25) நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்களின் கோவை மாவட்ட தலைவர் வெங்கடேச நாராயணன், ஒருங்கிணைப்பாளர்கள் கிரிஜா, உதயகுமார் ஆகியோர் செய்துள்ளனர்.