/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்றைய நிகழ்ச்சிகள்(கோவை சிட்டி) அக்டொபர் 28
/
இன்றைய நிகழ்ச்சிகள்(கோவை சிட்டி) அக்டொபர் 28
ADDED : அக் 27, 2025 11:20 PM
ஆன்மிகம் கந்தசஷ்டி விழா * சுப்பிரமணிய சுவாமி கோயில், மருதமலை. திருக்கல்யாணம், புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா, காலை 10.30 முதல் 11.30 மணிக்குள்.
* பழனி ஆண்டவர் கோயில், மதுக்ரை மார்க்கெட். பெருமாள் கோயிலில் இருந்து கல்யாண சீர்வரிசை கொண்டு வருதல், காலை 6.45 மணிக்கு மேல். சுவாமி திருக்கல்யாணம், காலை 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள். அன்னதானம், காலை 10 மணி. திருவீதி உலா, மாலை 6.30 மணிக்கு மேல்.
* தண்டபாணிக்கடவுள் கோயில், கவுமார மடாலயம், சவரணம்பட்டி. மூலவருக்கு திருமஞ்சனம், காலை 7 மணி. வேள்வி, சிறப்பு அபிஷேகம், காலை 9.30 மணி. திருக்கல்யாணம், மதியம் 12 மணி. திருமண விருந்து மதியம், 1 மணி.
* திருச்செந்தில் கோட்டம், கச்சியப்பர் மடாலய சேரிட்டபுள், ஈச்சனாரி. சீர்தட்டு அழைப்பு, காலை 9 மணி. திருக்கல்யாணம், காலை 10 மணி. மகா அலங்கார பூஜை, அன்னதானம் மதியம் 12 மணி.
* பாலதண்டாயுதபாணி கோயில், சுக்கிரவார்பேட்டை. மகா தீபாராதனை, காலை 6 மணி. கோனியம்மன் கோயிலில் இருந்து பால்காவடி பால்குடங்களுடன் புறப்பட்டு திருவீதிகள் வழியாக திருக்கோயிலை வந்தடைந்து அபிஷேகம், காலை 7 மணி. திருக்கல்யாண உற்சவம், மாலை 4.35 மணி.
* காலகாலேஸ்வரர் கோயில், கோவில்பாளையம், எஸ்.எஸ்.குளம். மூலவருக்கு அபிஷேகம், வேள்வி வழிபாடு, காலை 7.45 முதல் 8.45 மணிக்குள். திருக்கல்யாணம் காலை 7.45 முதல் 8.45 மணிக்குள். திருவீதி உலா, மதியம் 12 மணிக்கு மேல்.
* மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், மசக்கவுண்டன்பாளையம், அன்னுார். திருக்கல்யாணம், காலை 11 மணி. அன்னதானம், மதியம் 12 மணி. மஞ்சள் நீராட்டு விழா, மாலை 5 மணி. மறு பூஜை, இரவு 7 மணி.
* பாலதண்டாயுபாணி சுவாமி கோயில், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார். திருக்கல்யாணம், காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை. மகா அன்னதானம், மதியம் 12.30 மணி. உற்சவர் திருவீதி உலா, மாலை 6 மணி.
* வள்ளி, தேசவசேன கல்யாண சுப்ரமணிய சுவாமி சன்னதி, அருள்மிகு காமாட்சி அம்மாள் கோவில், ஆர்.எஸ்.புரம். சஷ்டி அபிஷேகம், மாலை 6 மணி.
சண்டி மஹா ஹோமம் சிவகுரு மகாவிஷ்ணு சேத்ரம், கே.என்.ஜி.புதுார், தடாகம் ரோடு. சக்கர நவாவரண பூஜை, காலை 9 முதல் 11 மணி வரை. சண்டி ஹோமம், மாலை 5 முதல் இரவு 8 மணி வரை.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7:30 மணி மற்றும் மாலை 6 மணி.
பொது குடிநோய் விழிப்புணர்வு * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

