ADDED : அக் 13, 2024 06:06 AM

1. நுாற்றாண்டு விழா கொண்டாட்டம்
சூலுார் அருகம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியின் நுாற்றாண்டு விழா கொண்டாட்டம் இன்று பள்ளி வளாகத்தில் பிற்பகல், 3:00 மணியளவில் கொண்டாடப்பட உள்ளது.
2. ஆசிரியர்களுக்கு பாராட்டு
முத்துக்கல்லுார் கல்வி வளர்ச்சிக் குழுவின், 19ம் ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா இன்று நடைபெறுகிறது. வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில், பிற்பகல், 3:30 மணியளவில் துவங்க உள்ளது.
3. திருக்கல்யாணம்
பிளிச்சி கிராமம் மத்தம்பாளையத்தில் உள்ள, ஸ்ரீ திகம்பரேஸ்வரர் கோவிலில், திருக்கல்யாண நிகழ்வு காலை, 8:00 மணி முதல் பல்வேறு நிகழ்வுகளும், அதன் ஒரு பகுதியாக, காலை, 10:30 மணிக்கு வள்ளி கும்மி கலைநிகழ்வும் நடைபெற உள்ளது.
4. விருது வழங்கும் விழா
சவுரிபாளையம், பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில், சாதனையாளர்களுக்கு விருது வழங்கல், அரசு பள்ளி மாணவர்களுக்கு நிரந்தர நுாலக அட்டை வழங்கல், மதநல்லிணக்க தீபாவளி கொண்டாட்டம் ஆகிய மூன்று நிகழ்வுகள் ஒருங்கிணைந்து நடைபெற உள்ளன. சவுரிபாளையம், மஹாலட்சுமி திருமண மண்டபத்தில் காலை, 9:00 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
5. குடிநோய் விழிப்புணர்வு முகாம்
சரியான சிகிச்சை மற்றும் மனக்கட்டுப்பாடு இருந்தால் குடிநோயில் இருந்து மீண்டு வர இயலும். இதற்கான விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார் டி.எஸ்., நர்சரி பள்ளியில் காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு சார்பில் நடைபெறுகிறது.
6. அமைதியின் அனுபவம்
வீடியோ சத்சங் நிகழ்வு அமைதியின் அனுபவம் என்ற தலைப்பில் ஓசூர் சாலை, ஆருத்ரா ஹாலில், காலை, 11:00 மணியளவில் நடைபெற உள்ளது.