/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : நவ 22, 2024 11:18 PM

சத்ய சாய் அவதார தினம்
பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின், 99வது அவதார தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் பிரதான சாலையில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. காலை, 9:00 முதல், ஓம்காரம், சுப்ரபாதம், நாமசங்கீர்த்தனம், கொடியேற்றுதல், ஹோமம், சாய் பஜன் நடக்கிறது.
ஜென்மாஷ்டமிப் பெருவிழா
ஆலாந்துறை, நாதேவுண்டன்புதுார், ஸ்ரீமத் தர்மராஜா அருள்பீடம் சார்பில், பைரவர் ஜென்மாஷ்டமிப் பெருவிழா நடக்கிறது. காலை, 7:00 முதல் 11:00 மணி வரை, அம்மனிடத்தில் அனுமதி பெறுதல், பைரவர் திருவீதி உலா, கோமாதா பூஜை, மகா யாக பூஜை நடக்கிறது.
இசை நிகழ்ச்சி
ஆர்.எஸ்.,புரம், ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி சார்பில், பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 99வது பிறந்தநாள் விழா சிறப்பு இசை நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சி, ஆர்.எஸ்.,புரம், சிந்து சதன் அரங்கில், மாலை, 6:00 முதல் இரவு, 7:15 மணி வரை நடக்கிறது.
அஷ்டமி விழா
வடக்கு நோக்கி இருக்கும் பைரவருக்கென தனிக்கோவிலாக மொண்டிபாளையம், திம்மநாயக்கன்புதுார், மகா பைரவர் கோவில் உள்ளது. இங்கு, ஜென்ம அஷ்டமி விழா மாலை, 6:00 முதல் இரவு, 9:00 மணி வரை நடக்கிறது. இரவு, 8:30 மணிக்கு மேல் அன்னதானம் நடக்கிறது.