/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஏப் 26, 2025 11:16 PM
சித்திரைத் திருவிழா
அவிநாசி ரோடு, தண்டுமாரியம்மன் கோவிலில் சித்திரைப் பெருந்திருவிழா விமர்சையாக நடந்து வருகிறது. இன்று, காலை, 7:00 மணிக்கு சங்காபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு, வசந்த உற்சவம் நடக்கிறது.
ஆண்டு விழா
இதயங்கள் தொண்டு அறக்கட்டளையின், எட்டாவது ஆண்டு விழா இன்று அவிநாசி ரோடு, சிட்ரா ஆடிட்டோரியத்தில் காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. இதில், நேஷனல் ஹெல்த் மிஷன் இயக்குனர் அருண் தம்புராஜ், சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
ஓவியக்கண்காட்சி
அவிநாசி ரோடு, கஸ்துாரி சீனிவாசன் கலை மையத்தில், இந்தாண்டுக்கான 'ரிதமிக் பேலட்' தொடரின் ஐந்தாவது ஓவியக் கண்காட்சி நடந்து வருகிறது. காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.
இலக்கியச் சந்திப்பு
கோவை மாவட்ட மைய நுாலகம் மற்றும் வாசக சாலை இணைந்து இலக்கியச் சந்திப்பு நிகழ்வை நடத்துகின்றனர். ஆர்.எஸ்.புரம், கோவை மாவட்ட மைய நுாலகத்தில், மாலை, 4:30 மணிக்கு நடக்கும் நிகழ்வில், எழுத்தாளர் தேவிலிங்கத்தின், 'நெருப்பு ஓடு' என்ற நாவல் குறித்த கலந்துரையாடல் நடக்கிறது.
பகவத்கீதை சொற்பொழிவு
உங்கள் எண்ணங்களால் ஒன்றை உருவாக்கவும், அழிக்கவும் முடியும் என போதிக்கும் பகவத்கீதை, மனமே வலிமையானது என்கிறது. டாடாபாத், ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷனில், பகவத்கீதை சொற்பொழிவு, மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது.
விழிப்புணர்வு மராத்தான்
வாய்ஸ் ஆப் கோவை சார்பில், போதையை விரட்ட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, 'போதைப்பொருள் - ஒரு முள்' என்ற பெயரில், மெகா மாரத்தான் நடக்கிறது. வ.உ.சி., பார்க், நேரு விளையாட்டு அரங்கம் அருகில், காலை, 6:00 மணிக்கு மாரத்தான் நடக்கிறது.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.
ஆரோக்கிய விழிப்புணர்வு
கோவை இயற்கை நலச்சங்கம் சார்பில், ஆரோக்கிய விழிப்புணர்வுக் கூட்டம் நடக்கிறது. அவிநாசி ரோடு, அண்ணா சிலை அருகே ஸ்ரீ சாய் காபே, டி.கே.பி., சேம்பரில் காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.
சமஸ்கிருத வகுப்புகள்
ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் மற்றும் சமஸ்கிருத வித்யாஸ்ரீ இணைந்து, சமஸ்கிருத வகுப்புகளை நடத்துகின்றன. காலை, 10:15 மணி முதல் மதியம், 1:15 மணி வரை, சமஸ்கிருத மொழி, பகவத்கீதை, ஸ்லோகங்கள் கற்பித்து தரப்படுகிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்., நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.

