/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : மே 11, 2025 12:19 AM
நரசிம்ம ஜெயந்தி
கோவை இஸ்கான் கிருஷ்ணர் கோவிலில், நரசிம்ம ஜெயந்தி விழாவில், இன்று காலை, 7:30 மணிக்கு நரசிம்ம ஹோமம் நடக்கிறது. மாலை, 5:30 மணி முதல், பஜனை, அபிஷேகம், சொற்பொழிவு, மகா ஆரத்தி, பிரசாத விருந்து ஆகியவை நடக்கிறது.
பூச்சாட்டுத் திருவிழா
பெரியநாயக்கன்பாளையம், பிளிச்சி, கரிச்சிபாளையம், ராஜமாரியம்மன் கோவிலில், பூச்சாட்டுத் திருவிழா நடந்து வருகிறது. இன்றைய நிகழ்வில், மாலை, 6:00 மணி முதல் நித்திய பூஜை, கம்பம் சுற்றி விளையாடுதல் நடக்கிறது.
உற்சவ திருவிழா
சூலுார், திருச்சி ரோடு, சிந்தாமணிப்புதுார், சக்தி மாரியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழாவின் கடைசி நிகழ்வான இன்று, மதியம், 12:00 மணிக்கு, கருப்பராயன், கன்னிமார் விசேஷ பூஜை நடக்கிறது.
ஆண்டு விழா
குறிச்சி, வெங்கடசாமி லே- அவுட், மங்கள விநாயகர் கோவிலில், 17ம் ஆண்டு விழா நடக்கிறது. காலை, 7:00 மணி முதல் மதியம், 12:00 மணி முதல், கணபதி ஹோமம், கலச பூஜைகள், அபிஷேக பூஜை, பக்தி இன்னிசை, சிறப்பு அலங்காரம், அன்னதானம் ஆகிய நிகழ்வுகள் நடக்கிறது.
மங்கள வழிபாடு
ஒன்னிபாளையம், பிளிச்சி, எல்லை கருப்பராயன் கோவிலில், மங்கள வழிபாடு நடக்கிறது. பதினெண் சித்தர்களும் ஒருங்கே அமைந்துள்ள, சித்தர் பீட சித்தக்கோவிலில் மங்கள வழிபாடு நிகழ்வு காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.
குண்டம் திருவிழா
ராம்நகர், கோகலே வீதி, மங்கள விநாயகர் முத்துமாரியம்மன் கோவிலில், 57வது சித்திரை மாத திருக்கல்யாண உற்சவம் மற்றும் குண்டம் திருவிழா நடக்கிறது. இன்று மாலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் சேவை, திருவிளக்கு வழிபாடு நடக்கிறது.
திருக்கல்யாண நிகழ்வு
மயிலம்பட்டி, சக்தி விநாயகர், கருப்பராயர், கன்னிமார் கோவிலில், அரசு வேம்பு திருக்கல்யாண வைபவ விழா நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு பாலவிநாயகர் கோவிலிலிருந்து சீர்வரிசை தட்டு கொண்டு வந்து, இரவு, 7:30 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
குருப்பெயர்ச்சி விழா
தடாகம் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பேருந்து நிறுத்தம், திரி நேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவிலில், 32ம் ஆண்டு குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது. காலை, 11:00 மணி முதல், குருபரிஹார வேள்வி, மதியம், 12:00 மணிக்கு 108 சங்கு பூஜை மற்றும் மதியம், 1:20 மணிக்கு மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.
பகவத்கீதை சொற்பொழிவு
உங்கள் எண்ணங்களால் ஒன்றை உருவாக்கவும், அழிக்கவும் முடியும் என போதிக்கும் பகவத்கீதை, மனமே வலிமையானது என்கிறது. டாடாபத், ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷனில், பகவத்கீதை சொற்பொழிவு, மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது.
16ம் ஆண்டு பெருந்திருவிழா
ஒத்தக்கால்மண்டபம், புற்றிடங்கொண்டீசர் கோவிலில், 16ம் ஆண்டு பெருந்திருவிழா நடந்து வருகிறது. மாலை, 6:30 மணிக்கு, தெப்பத்தேர் விழா, பஞ்சமூர்த்திகள் உரிய இடத்திற்கு எழுந்தருளல், வாண வேடிக்கை மற்றும் அன்னதானம் நடக்கிறது.
நில ஆவணங்கள் கண்காட்சி
கோவை நில மேலாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், வரலாற்று நில ஆவணங்கள் கணகாட்சி மற்றும் பயிற்சி மையம் துவக்க விழா நடக்கிறது. அவிநாசி ரோடு, கஸ்துாரி சீனிவாசன் அரங்கத்தில், காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.
கண் சிகிச்சை முகாம்
செயல் ஒரு சமூக செயற்பாட்டுக்களம் மற்றும் கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது. அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் முகாம், வேலாண்டிபாளையம், கோவில்மேடு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில், காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.
சமஸ்கிருத வகுப்புகள்
ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் மற்றும் சமஸ்கிருத வித்யாஸ்ரீ இணைந்து, சமஸ்கிருத வகுப்புகளை நடத்துகின்றன. காலை, 10:15 முதல் மதியம், 1:15 மணி வரை, சமஸ்கிருத மொழி, பகவத்கீதை, ஸ்லோகங்கள் கற்பித்து தரப்படுகிறது.
நுால் வெளியீடு
கோவை வசந்தவாசல் கவி மன்றம் சார்பில், நுால் வெளியீடு மற்றும் விருதுகள் வழங்கும் விழா, இலக்கிய சொற்பொழிவு ஆகிய நிகழ்வுகள் நடக்கின்றன. ரேஸ்கோர்ஸ், கோவை உற்பத்தித் திறன் குழு அரங்கில், காலை, 10:00 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.