sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகரில் இன்றையசிறப்பு நிகழ்ச்சிகள்

/

மாநகரில் இன்றையசிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றையசிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றையசிறப்பு நிகழ்ச்சிகள்


ADDED : மே 18, 2025 12:41 AM

Google News

ADDED : மே 18, 2025 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இசை விழா


உலகநல வேள்விக் குழு நாட்டுப்புற இசை கலைஞர் முன்னேற்றப் பேரவை இணைந்து நடத்தும் ஆன்மிக ஐம்பெரும் விழா நடக்கிறது. இதையொட்டி, உக்கடம், நரசிம்ம சுவாமி கோவிலில், காலை, 6:00 முதல் மாலை, 5:00 மணி வரை, இசைக்கலைஞர்களின் இசை விழா நடக்கிறது.

ஆன்மிக சொற்பொழிவு


ராம்நகர், கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் சார்பில், சிறப்பு உபன்யாசம் நடக்கிறது. ராம்நகர், ராமர் கோவிலில், மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை, 'சுந்தரகாண்டம்' என்ற தலைப்பில், சொற்பொழிவாளர் சுந்தரகுமார் உரையாற்றுகிறார்.

பஜன் உற்சவம்


அத்திப்பாளையம், ஏ.ஜி.என்., திருமண ஹாலில், காலை, 8:00 முதல் 11:00 மணி வரை, பஜன் உற்சவம் நடக்கிறது.

ஓவியக்கண்காட்சி


கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம் சார்பில், 14வது ரிதமிக் பேலட் தொடரின் ஓவியக் கண்காட்சி நடந்து வருகிறது. அவிநாசி ரோடு, கஸ்துாரி சீனிவாசன் கலைமையத்தில், 'மூன்றாவது கண்' என்ற தலைப்பில் நடக்கும் கண்காட்சியை, காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை கண்டு ரசிக்கலாம்.

கும்பாபிஷேக விழா


சலிவன் வீதி, ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம், அபயப்பிரத யோக ஆஞ்சநேயர் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை, 6:05 முதல் மாலை, 5:30 மணி வரை, வேத பாராயணம், கலச பூஜை, மூலமந்திர ஹோமங்கள், அஷ்டபந்தம் சாற்றுதல் ஆகியவை நடக்கிறது.

மாநில மாநாடு


தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், மாநில மகளிர் மாநாடு இன்று நடக்கிறது. காலை, 10:00 மணி முதல், பீளமேடு, ஹோப்காலேஜ் அருகே, ராமலட்சுமி நகர், மணி மகாலில் நடக்கிறது.

முப்பெரும் விழா


கோயமுத்துார் தெலுகு பிராமண சமுதாய நலச் சங்கம் சார்பில், முப்பெரும் விழா, சாய்பாபாகாலனி, பாரதி பார்க் ரோடு, வரசித்தி விநாயகர் கோவில் மண்டபத்தில் நடக்கிறது. காலை, 6:00 மணி முதல், சமஷ்டி உபநயன விழா, ஜாதக பரிவர்த்தனை மற்றும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு நடக்கிறது.

புதிய கிளைகள் திறப்பு


ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சின் புதிய இரண்டு கிளைகள் மேட்டுப்பாளையம் ரோடு, வான் ஹியூசன் அருகே வெள்ளக்கிணறு பிரிவு மற்றும் மேட்டுப்பாளையம், சக்கரவர்த்தி துகில் மாளிகை அருகே இன்று திறக்கப்படுகிறது. தொடக்க விழா சிறப்புச் சலுகையாக, 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பகவத்கீதை சொற்பொழிவு


உங்கள் எண்ணங்களால் ஒன்றை உருவாக்கவும், அழிக்கவும் முடியும் என போதிக்கும் பகவத்கீதை மனமே வலிமையானது என்கிறது. டாடாபத், ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசனில், பகவத்கீதை சொற்பொழிவு, மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது.

சமஸ்கிருத வகுப்புகள்


ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் மற்றும் சமஸ்கிருத வித்யாஸ்ரீ இணைந்து, சமஸ்கிருத வகுப்புகளை நடத்துகின்றன. காலை, 10:15 மணி முதல் மதியம், 1:15 மணி வரை, சமஸ்கிருத மொழி, பகவத்கீதை, ஸ்லோகங்கள் கற்பிக்கப்படுகின்றன.






      Dinamalar
      Follow us