/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஜூலை 25, 2025 09:06 PM
சாதுர்மாஸ்ய விரத மகோற்சவம் ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில், வேத வியாச பூஜை மற்றும் சாதுர்மாஸ்ய விரத மகோற்சவம் காலை, 9:30 மணி முதல் நடக்கிறது. அரவிந்த் வாய்ப்பாட்டு கச்சேரி நடக்கிறது.
கம்பராமாயண சொற்பொழிவு ராம்நகர், ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் சார்பில், ஆடி உற்சவத்தை முன்னிட்டு கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நடக்கிறது. மாலை, 6:30 முதல் நடக்கும் நிகழ்வில், திருச்சி கல்யாணராமன் சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார்.
பகவத்கீதை சத்சங்கம் ரேஸ்கோர்ஸ், நாராயண் டவர்சில், பகவத்கீதை சத்சங்கம் மாலை, 5:30 முதல் இரவு, 7:00 மணி வரை நடக்கிறது. சுவாமி ஜகத்மானந்த சரஸ்வதி சத்சங்கத்தை நிகழ்த்துகிறார்.
கோவை புத்தகத் திருவிழா மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை மற்றும் கொடிசியா இணைந்து, கோவை புத்தகத் திருவிழாவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடத்துகின்றன. காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை கண்காட்சியை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கலாம்.
பட்டமளிப்பு விழா நீலாம்பூர், கதிர் கலை அறிவியல் கல்லுாரியில், 2019 - 22, 2020 - 23ம் கல்வியாண்டு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா, காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. விழாவில் பி.ஜி.பி., குரூப் தலைவர் பழனி பெரியசாமி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்கிறார்.
சிந்தனை அரங்கம் பாரதீய வித்யா பவன் கோவை மையம் சார்பில், 185வது சிந்தனை அரங்க சிறப்புரை நிகழ்ச்சி, ஆர்.எஸ்.புரம் பவன் வளாகத்தில் மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. லெப்டினன்ட் கர்னல் திருமால் ஜெயராஜ், 'என் வாழ்க்கை அனுபவங்கள்' என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
ஆண்டு மாநாடு கங்கா மருத்துவமனை மற்றும் இந்திய மஸ்குலோஸ் கெலிட்டல் சங்கம் இணைந்து, 13வது ஆண்டு மாநாட்டை நடத்துகின்றன. மேட்டுப்பாளையம் ரோடு, கங்கா மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் காலை, 9:30 மணி முதல் நடக்கிறது.
விருது வழங்கும் விழா தேசிய பார்வையற்றோர் ஆணையம் மற்றும் ஜெத்ரோ மறுவாழ்வு அறக்கட்டளை சார்பில், 146வது டாக்டர் ஹெலன் கெல்லர் பிறந்த நாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது. வரதராஜபுரம் மெயின் ரோடு, தேசிய பார்வையற்றோர் ஆணையத்தில் காலை, 10:30 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது.
மனம் போல் வாழ்வு பி.எஸ்.ஜி., அறநிலையம் சார்பில் ஆன்மீக இலக்கியத் தொடர் சொற்பொழிவு, பீளமேடு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில் மாலை,6:00 மணிக்கு நடக்கிறது. பேச்சாளர் பேராசிரியர் ராமச்சந்திரன், 'மனம் போல் வாழ்வு' என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளி யில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.