/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஆக 23, 2025 02:49 AM
ஆவணி விழா ஸ்ரீ ஆஞ்சநேயா அறக்கட்டளை சார்பில், ஆவணி முதல் சனிக்கிழமை விழா, மருதுார், அனுமந்தராயசாமி கோவிலில் நடக்கிறது. காலை 10 மணி முதல், விளக்கேற்றுதல், பஜனை, அன்னதானம் போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.
சிந்தனை அரங்கம் பாரதிய வித்யா பவன் கோவை மையம் சார்பில், 186வது சிந்தனை அரங்கம் சிறப்புரை நிகழ்ச்சி, ஆர்.எஸ்.புரம் பவன் வளாகத்தில், மாலை 5 மணிக்கு நடக்கிறது. என்.ஜி., மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் அருண் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
யோக சூத்திர சொற்பொழிவு ஆர்.எஸ்.புரம், மேற்கு சம்பந்தம் ரோடு, இன்டக்ரல் யோகா இன்ஸ்டிட்யூட் சார்பில், பதஞ்சலி யோக சூத்திர சொற்பொழிவு மாலை 6.30 மணி முதல் நடக்கிறது. திருவண்ணாமலை, ஸ்ரீ அருணாச்சல ரமண ஆத்ம வித்யா மந்திர் சுவாமி ரமண ஸ்வருபானந்தா பங்கேற்கிறார்.
'வையத் தலைமை கொள்' பி.எஸ்.ஜி., அறநிலையம் சார்பில் பீளமேடு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி வளாகத்தில், மாலை 6 மணிக்கு சொற்பொழிவு நடக்கிறது. பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார், 'வையத் தலைமை கொள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
ஓவியக் கண்காட்சி கோடு ஆர்ட் கேலரி சார்பில், 'அம்பாரத் துாரிகை' என்ற தலைப்பில் ஓவியக் கண்காட்சி நடக்கிறது. அவிநாசி ரோடு, கஸ்துாரி சீனிவாசன் கலை மையத்தில், காலை 10 மணி முதல் கண்காட்சியை பார்வையிடலாம்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார் புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார் ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு 7 முதல் 8.30 மணி வரை இம்முகாம் நடக்கிறது.