/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : நவ 15, 2025 10:22 PM
தெய்வீக கண்காட்சி ஸ்ரீ சாயி சாசஷாத்காரம் அறக்கட்டளை, ஸ்ரீ சத்ய சாய் மாருதி சேவா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ நாக சாய் அறக்கட்டளை இணைந்து சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு தெய்வீக கண்காட்சியை நடத்துகின்றன. இதில் பகவான் பாபாவின் வாழ்க்கையின் அரிய காட்சிகள், லீலைகள், பகவான் பாபாவின் சேவைகள் மல்டிமீடியா காட்சிகளாக இடம் பெறுகிறது. சாய்பாபா காலனி, நாகசாய் மந்திர், சாய் தீப் மண்டபத்தில் காலை 9 முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது.
மகா மஹோற்சவ விழா பகவான் ஸ்ரீ சத்யசாய் பாபாவின் 100வது ஜென்ம தினத்தை முன்னிட்டு, ரேஸ்கோர்ஸ், சத்யசாய் மந்திரில், மகா மஹோற்சவ விழா நடக்கிறது. காலை 5.15 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு நிகழ்வுகள் நடக்கிறது. இதேபோல், போத்தனுார், ஸ்ரீ ராம் நகர், ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியிலும் சாய்பாபா நுாற்றாண்டு விழா நிகழ்வுகள், மதியம் 12 மணி முதல் நடக்கின்றன.
மீனாட்சி திருக்கல்யாணம் சோமையனுார், ஸ்வாகதம் சாய் மந்திர் சார்பில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் ஜெயந்தி விழாவை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன. காலை 8 மணி முதல் உஞ்சவ்ருத்தி, குரு கீர்த்தனைகள், சிவபூஜை நடக்கிறது. மதியம், 12 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், மாலை 6.30 மணிக்கு வள்ளி கும்மியாட்டமும் நடக்கிறது.
மருத்துவக் கண்காட்சி பாயன்ட் மீடியாவின் சார்பில், 'மெடிக்கான் 2025' என்ற தலைப்பில் பி2பி மருத்துவ கண்காட்சி அவிநாசி ரோடு, கொடிசியா வளாகத்தில் நடக்கிறது. புதுமையான மருத்துவ தயாரிப்புகள், தளவாடங்கள், நோயறிதல் கருவிகள் மற்றும் சுகாதார தீர்வுகளை காட்சிப்படுத்தும் 120க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன.
ஞாபக மறதி வரமே, சாபமே கோவை நகைச்சுவை சங்கம் சார்பில், 'ஞாபக மறதி நமக்கு வரமே! சாபமே! என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடக்கிறது. அவிநாசி ரோடு, எஸ்.என்.ஆர்., அரங்கில் மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. அனுமதி இலவசம், அனைவரும் கலந்துகொள்ளலாம்.
வளர்ச்சியில் சுதேசி சுவாமி விவேகானந்தர் இளைஞர்சக்தி இயக்கம் சார்பில், 'நமது தேசம் புண்ணிய தேசம்' விழிப்புணர்வு சிறப்புரை, சூலுார், முத்துக்கவுண்டன்புதுார், சுவாமி விவேகானந்தர் அரங்கில் நடக்கிறது. 'தேசத்தின் பொருளாதார வளர்ச்சியின் ஆணிவேர் சுதேசி' என்ற தலைப்பில் மாலை 6 முதல், இரவு 8 மணி வரை நடக்கிறது.
பைக் பேரணி கோவை விழாவின் ஒருபகுதியாக, சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடக்கிறது. பி.ஆர்.எஸ்., மைதானத்தில், காலை 6.30 மணிக்கு துவங்கும் பேரணியில், ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பங்கே ற்கின்றன.
பகவத்கீதை சொற்ெபாழிவு ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் சார்பில் சுவாமி தயானந்த சரவஸ்வதியின் வீடுதோறும் கீதை உபதேசம் நடக்கிறது. டாடாபாத், மூன்றாவது வீதி, ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷனில் மாலை 5 மணிக்கு நடக்கிறது.
செட்டிநாடு திருவிழா கோவை நகரத்தார் சங்கம் சார்பில், கோவையில் 'வைப்ஸ் ஆப் செட்டிநாடு' என்ற பெயரில், செட்டிநாடு ஷாப்பிங் மற்றும் உணவு திருவிழா நடக்கிறது. காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில், காலை 10.30 மணி முதல், இரவு 8.30 மணி வரை நடைபெறும் கண்காட்சியில், விதம், விதமான செட்டிநாடு உணவுகளை ருசிபார்க்கலாம்.
ஸ்கை டான்ஸ் கொடிசியா, பார்க் கிரவுண்ட் மைதானத்தில் 'ஸ்கை டான்ஸ்' எனப்படும் லேசர் ஷோ நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6.30 முதல், இரவு 10 மணி வரை குழந்தைகள் உள்ளிட் ட பார்வையாளர்களை கவரும் தனித்துவமான ஒளி, ஒலி லேசர் ஷோ இடம்பெறு கிறது.
அறிவியல் கண்காட்சி அவிநாசி ரோடு, கொடிசியா வர்த்தக வளாகத்தில், கோவை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழா நடக்கிறது.'டி' ஹாலில் நடைபெறும் கண்காட்சியை, காலை 10 முதல் மாலை 4.30 மணி வரை பார்வையிடலாம். செய்முறைப் பட்டறைகள், கண்காட்சிகள் மற்றும் போட்டிகள் இடம்பெறும். விண்வெளி, ரோபாட்டிக்ஸ், விவசாயம், சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகள் குறித்து தொழில் நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது.

