UPDATED : நவ 10, 2026 06:00 PM
ADDED : நவ 10, 2026 05:55 PM
அ நிறம் | அளவு
கோவை: வேளாண் பல்கலையின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை நுண்ணறிவு பிரிவு.
குறிப்பிட்ட கால இடைவெளியில் விவசாயிகளுக்கு அறுவடைக்கு முந்தைய விலை முன்னறிவிப்பை வழங்கி வருகிறது. ஒட்டன்சத்திரம் சந்தையில் நிலவும் தக்காளி விலை அடிப்படையில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதன்படி, அறுவடை காலத்தில் தக்காளி விலை ரூ.30 வரை இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. பிற மாநில வரத்து அதிகரிப்பு, மழை ஆகியவற்றால் உள்ளூர் சந்தை விலை பாதிக்கப்படும்; அதற்கேற்றார் போல் விவசாயிகள் முடிவுகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
