UPDATED : ஆக 13, 2026 08:36 PM
ADDED : ஆக 13, 2026 08:22 PM
அ நிறம் | அளவு
கோவை: மாவட்ட நிர்வாகம் சார்பில், வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடக்கிறது. இம்மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. நாளை காலை, 8.50 மணிக்கு கலெக்டர் பவன்குமார் தேசிய கொடியேற்றி வைத்து, போலீஸ் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் பல்வேறு நலத்திட்ட செயல்பாடுகள் நடக்கின்றன.
போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமையில், நான்கு துணை கமிஷனர்கள், பிரிவுகளின் கீழ், 1200 பேரும், புறநகரில், எஸ்.பி., பவன்குமார் தலைமையில், 800 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
