/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளை கிருத்திகை; மருதமலைக்கு காரில் போகாதீங்க
/
நாளை கிருத்திகை; மருதமலைக்கு காரில் போகாதீங்க
ADDED : நவ 14, 2024 11:22 PM
கோவை; நாளை கார்த்திகை மாத கிருத்திகை மற்றும் மாதப்பிறப்பு நாள் என்பதால் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் காரில் மருதமலை கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாளை கார்த்திகை மாத கிருத்திகை, அதற்கடுத்து நவ.,17 அன்று ஞாயிறு விடுமுறை என்பதால் மருதமலை சுப்ரமணியசுவாமி திருக்கோவிலுக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை தருவதால் நெரிசல் ஏற்படும்அதனை கருத்தில் கொண்டு மலைக்கோவிலுக்கு இலகு ரக வாகனங்களில் பக்தர்கள் செல்ல அனுமதியில்லை.
இரு சக்கர வாகனங்கள் வாயிலாகவும், மலைப்படிகள் வழியாகவும், கோவில் சார்பில் இயக்கப்படும் பஸ் மூலம் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.