/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
100 சதவிகித வருகை மாணவர்களுக்கு 'டூர்'
/
100 சதவிகித வருகை மாணவர்களுக்கு 'டூர்'
ADDED : ஜன 23, 2025 11:24 PM
கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், 100 சதவிகிதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு 'பேட்ஜ்' வழங்கப்பட்டது.
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில், புரோபெல் என்ற தனியார் நிறுவனம் சார்பில், 100 சதவிகித வருகை புரிந்த 28 மாணவர்களுக்கு 'பேட்ஜ்' வழங்கப்பட்டது.
மேலும், அதிக வருகை சதவிகிதம் கொண்ட முதல் மூன்று இடம் பிடித்த 6 ஏ, 8 பி, 10 டி மற்றும் 11 ஏ ஆகிய வகுப்புகளுக்கு, தனியார் நிறுவன சி.எஸ்.ஆர்., மேலாளர் கோவிந்த் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி ஆகியோர் கேடயம் வழங்கினர்.
தொடர்ந்து, பேட்ஜ் மற்றும் கேடயம் பெற்ற மாணவர்கள் அனைவரையும், நிறுவனம் சார்பில், ஒரு நாள் சுற்றுலா அழைத்து செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டது.
சி.எஸ்.ஆர்., மேலாளர் கூறுகையில், ''பள்ளி மாணவர்கள், கல்வி இடை நின்றலை தவிர்க்கவும், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கவும், ஒரு நாள் சுற்றுலா மற்றும் பரிசுகள் வழங்குகிறோம்,'' என்றார்.

