/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்சிமுனையில் வசதிகளில்லை சுற்றுலா பயணியர் பரிதவிப்பு
/
காட்சிமுனையில் வசதிகளில்லை சுற்றுலா பயணியர் பரிதவிப்பு
காட்சிமுனையில் வசதிகளில்லை சுற்றுலா பயணியர் பரிதவிப்பு
காட்சிமுனையில் வசதிகளில்லை சுற்றுலா பயணியர் பரிதவிப்பு
ADDED : மே 23, 2025 12:36 AM
வால்பாறை : நல்லமுடி காட்சி முனையில் அடிப்படை வசதி இல்லாததால், சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் சுற்றுலா பயணியரை மகிழ்விக்க பல்வேறு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆழியாறு, கவியருவி, அட்டகட்டி வியூபாய்ன்ட், ஆர்கிட்டோரியம், டைகர்வேலி, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, கவர்க்கல் வியூபாயின்ட், நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை ஆகிய இடங்களுக்கு, சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர்.
இந்த இடங்களை சுற்றி பார்க்க வனத்துறை சார்பில், 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், வால்பாறை நகரிலிருந்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனைப்பகுதிக்கு சுற்றுலாபயணியர் செல்ல, வனத்துறை சார்பில் ஒரு நபருக்கு, 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால், சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சுற்றுலா பயணியர் கூறியதாவது:
கோடை விடுமுறையை வால்பாறையில் கொண்டாட பல்வேறு மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணியர் திரண்டுள்ளனர். ஆனால், சுற்றுலா பயணியர் அதிகம் செல்லும் இடங்களில் போதிய அடிப்படை வசதி இல்லை. குறிப்பாக, நல்லமுடி காட்சி முனையில் சுற்றுலா பயணியர் நடந்த செல்லும் ரோடு சீரமைக்கப்படவில்லை.
கட்டணம் வசூலிப்பதில் தீவிரம் காட்டும் வனத்துறையினர், அடிப்படை வசதிகள் செய்து தர தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில், கரடு, முரடான ரோட்டை சீரமைத்து, கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.