/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிரப்பள்ளியில் குளிக்க தொடர் தடை; சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
/
அதிரப்பள்ளியில் குளிக்க தொடர் தடை; சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
அதிரப்பள்ளியில் குளிக்க தொடர் தடை; சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
அதிரப்பள்ளியில் குளிக்க தொடர் தடை; சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
ADDED : நவ 25, 2024 06:34 AM

வால்பாறை; அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஆறு மாதங்களாக குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளதால், இருமாநில சுற்றுலாபயணியர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், சுற்றுலாபயணியர் அதிக அளவில் இங்கு சென்று வருகின்றனர். அங்கு கடந்த நான்கு மாதங்களாக தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்தது. இதனால் அதிரப்பள்ளி, சார்பா உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலாபயணியர் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
இந்நிலையில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் மழைப்பொழிவு குறைந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களாக சுற்றுலாபயணியர் குளிக்க அனுமதி இல்லாததால், தமிழகம் மற்றும் கேரள மாநில சுற்றுலாபயணியர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர். இது குறித்து கேரள வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கேரளாவில் தென்மேற்குப்பருவ மழைக்கு பின், கடந்த மாதம் பழங்குடியின வாலிபர் நீச்சல் தெரியாமல், நீர்வீழ்ச்சி அருகே மூழ்கி உயிரிழந்தார்.
அதிரப்பள்ளியில் தற்போது நீர்வரத்து குறைந்தாலும், சுற்றுலாபயணியர் பாதுகாப்பு கருதி தற்காலிமாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்த பின், சுற்றுலாபயணியர் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள். அது வரை அவர்கள் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை தொலைவில் இருந்தபடி கண்டு ரசிக்கலாம்.
இவ்வாறு, தெரிவித்தனர்.