/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை ரசிக்கும் சுற்றுலாபயணியர்
/
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை ரசிக்கும் சுற்றுலாபயணியர்
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை ரசிக்கும் சுற்றுலாபயணியர்
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை ரசிக்கும் சுற்றுலாபயணியர்
ADDED : ஜூலை 14, 2025 08:08 PM

வால்பாறை; கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால், சுற்றுலாபயணியர் அதிக அளவில் இங்கு சென்று வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களாக கேரளாவில் பெய்து வரும் தென்மேற்குப்பருவ மழையினால், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் சுற்றுலாபயணியர் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கேரளாவில் மழைப்பொழிவு படிப்படியாக குறைந்து வருவதால், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை காண வார விடுமுறையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணியர் திரண்டுள்ளனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அதிரப்பள்ளியில் மழைப்பொழிவு சற்று குறைந்துள்ளதால், சுற்றுலாபயணியர் மீண்டும் நீர்வீழ்ச்சியை காண அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நீர்வீழ்ச்சியில் யாரும் குளிக்க அனுமதி இல்லை. தொலைவில் இருந்தபடி நீர்வீழ்ச்சியை சுற்றுலாபயணியர் கண்டு ரசிக்கலாம்' என்றனர்.