/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திடீரென நிறுத்தப்படும் டவுன் பஸ்கள்; முறையாக இயக்க மக்கள் கோரிக்கை
/
திடீரென நிறுத்தப்படும் டவுன் பஸ்கள்; முறையாக இயக்க மக்கள் கோரிக்கை
திடீரென நிறுத்தப்படும் டவுன் பஸ்கள்; முறையாக இயக்க மக்கள் கோரிக்கை
திடீரென நிறுத்தப்படும் டவுன் பஸ்கள்; முறையாக இயக்க மக்கள் கோரிக்கை
ADDED : நவ 26, 2024 07:56 PM
பொள்ளாச்சி; கலெக் ஷன் குறைவு என்பதை காரணம் காட்டி, கிராமப் புறங்களுக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் திடீரென நிறுத்தக் கூடாது என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி நகரில் இருந்து, சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு அதிகப்படியான அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள், ஏற்கனவே, தொலைதுார ஊர்களுக்கு இயக்கப்பட்டவை. இதனால், பெரும்பாலான பஸ்களில், முகப்பு மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் உள்ள வழித்தட ஊர்களின் பெயர்கள், அச்சிடாமல் உள்ளது.
இருப்பினும், பெரும்பாலான கிராமங்களில் இருந்து, பள்ளி மற்றும் கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், தொழில் நிமித்தமாக செல்வோர், மக்கள் பலரும், அரசு டவுன் பஸ்சில் பயணிக்கின்றனர். ஆனால், சில வழித்தடங்களில் பஸ்கள் முறையாக இயக்கப்படாததால், மக்கள் பரிதவிக்கின்றனர்.
அவ்வகையில், பெதப்பம்பட்டி, வழித்தடத்தில் இயக்கப்படும் 24 பி; நெகமம் வழித்தடத்தில் இயக்கப்படும் வழித்தட எண் 56, பஸ்கள் முறையாக இயக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, கிராம மக்கள் சப்-கலெக்டரிடம் மனு அளித்தனர். துறை ரீதியாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதன்பின், கடந்த இரு நாட்களாக வழக்கமான வழித்தடத்தில் இருந்த இரு பஸ்களும் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து, மக்கள் கூறியதாவது:
துறை ரீதியான உயரதிகாரிகள் உத்தரவு கிடைத்தால் தான், பஸ்கள் இயக்கம் தொடரும் என்ற நிலை உள்ளது. கிராமங்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில், பயணியர் முண்டியடித்து பஸ்சில் ஏறிச் செல்கின்றனர்.
குறிப்பாக, பஸ் படிகளில், கால் வைக்கக் கூட இடம் இல்லாத நிலையில், மாணவர்கள் தொங்கியபடி பயணிக்கின்றனர். மற்ற நேரத்தில் பயணியர் கூட்டம் குறைவாக இருப்பதால், கலெக் ஷன் குறைவு என்பதை காரணம் காட்டி, டவுன் பஸ்கள் திடீரென நிறுத்தம் செய்யப்படுகின்றன.
அதன்பின், கலெக்டர் வரையிலும் மனு கொடுத்து வலியுறுத்தி பஸ்களை இயக்கத்துக்கு கொண்டு வர வேண்டியுள்ளது. இதுபோன்ற நிலையை போக்குவரத்து கழக அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.