/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாட்டு சந்தையில் வர்த்தகம் ஜரூர்
/
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாட்டு சந்தையில் வர்த்தகம் ஜரூர்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாட்டு சந்தையில் வர்த்தகம் ஜரூர்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாட்டு சந்தையில் வர்த்தகம் ஜரூர்
ADDED : ஜூன் 03, 2025 11:59 PM

பொள்ளாச்சி, ; பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு மாடுகள் அதிகரித்ததுடன், விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு, வெளிமாநிலங்கள்; தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு வருகின்றன.
செவ்வாய் கிழமையில், நான்காயிரத்துக்கு மேற்பட்ட மாடுகள்; வியாழக்கிழமைகளில், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாடுகளும் விற்பனைக்கு வருகின்றன. இங்கிருந்து பெரும்பாலும் கேரளாவிற்கு மாடுகள், வளர்ப்பு மற்றும் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுகின்றன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மாடுகள் வாங்கி செல்கின்றனர். இந்த சந்தையில், வாரந்தோறும் இரண்டு கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறுகிறது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று சந்தைக்கு மாடுகள் அதிகரித்து காணப்பட்டது.விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
மாட்டு வியாபாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு மாடு வரத்து அதிகரித்து காணப்பட்டது. மொத்தம், 2,500 மாடுகள் வரத்து இருந்தது; வியாபாரம் விறு, விறுப்பாக நடைபெற்றது.
நாட்டு காளை, 65 - 70 ஆயிரம் ரூபாய், நாட்டு பசு, 40 - 45 ஆயிரம், நாட்டு எருமை,55 - 60 ஆயிரம்; முரா, 70 - 75 ஆயிரம் ரூபாய், ஜெர்சி, 35 - 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கேரளா வியாபாரிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. மாடுகளின் வரத்து அதிகமாக இருந்ததால் வியாபாரமும் விறுவிறுப்பாக நடந்தது. ஒரு நாளில் மட்டும், 4 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
இவ்வாறு, கூறினர்.