/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாட்டு சந்தை பணிகளை விரைந்து முடியுங்க! வியாபாரிகள் வலியுறுத்தல்
/
மாட்டு சந்தை பணிகளை விரைந்து முடியுங்க! வியாபாரிகள் வலியுறுத்தல்
மாட்டு சந்தை பணிகளை விரைந்து முடியுங்க! வியாபாரிகள் வலியுறுத்தல்
மாட்டு சந்தை பணிகளை விரைந்து முடியுங்க! வியாபாரிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 20, 2025 02:27 AM

பொள்ளாச்சி : 'பொள்ளாச்சி மாட்டு சந்தை விரிவாக்கப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, மாநில மாட்டு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் நல சங்க செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சியில், மாநில மாட்டு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் நல சங்க செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. பொருளாளர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
மாடு ஏற்றி, இறக்கும் தொழிலாளர்கள், லாரி ஓட்டுநர்கள், லாரி ��னர்கள் ஆகியோரை நலவாரியத்தில் இணைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முறையாக சந்தா வசூல் செய்ய வேண்டும்.
தென்மாநிலத்தில் மிகப்பெரிய சந்தை என புகழ் பெற்ற, பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு, சென்னை அடையார் தோல் பதனிடும் இன்ஸ்டியூட், ஜெர்மன் குழு, கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், ஓட்டுக்கொட்டகை, கல் தரை அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்தனர்.
திடீரென அந்த ஓட்டுக்கொட்டகையை இடித்து, குடிநீர் வடிகால் வாரியத்தின் வாயிலாக பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது.இடப்பற்றாக்குறை ஏற்பட்டது குறித்து, முன்னாள் எம்.பி., சண்முகசுந்தரம் வாயிலாக அமைச்சர் நேருவிடம் நேரடியாக முறையிடப்பட்டது.
பாதாள சாக்கடை திட்ட துவக்க விழாவுக்கு வந்த அமைச்சர், சந்தையை பார்வையிட்டு விரிவாக்கம் செய்ய உறுதி அளித்தார். மாட்டு சந்தை விரிவாக்கத்துக்காக நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டு, இரண்டு ஆண்டுகளாகியும் வேலைகள் முடியாமல் உள்ளது.
எனவே, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களை சங்க நிர்வாகிகள் சந்தித்து பணியை வேகப்படுத்த முயற்சி எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
வாரத்தில் இரு நாள் கூடும் மாட்டு சந்தையில், புதியதாக கட்டப்பட்ட கழிப்பிடம், தமிழக முதல்வரால், காணொலி வாயிலாக திறக்கப்பட்டு ஓராண்டாகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், நிர்வாகிகள் செல்வராஜ், அங்குராசு, கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.