தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிறுதானிய பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி

சிறுதானிய பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி

சிறுதானிய பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி


UPDATED : நவ 07, 2026 03:49 PM

ADDED : நவ 07, 2026 03:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 03:49 PM ADDED : நவ 07, 2026 03:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ஊட்டச்சத்து நிறைந்த மாற்று பயிர்களான சீகைத்தினை, பாப்பரை மற்றும் குலசாகை ஆகியவற்றின் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், விவசாயிகள் மற்றும் வேளாண் விரிவாக்க அலுவலர்களுக்கு கோவையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

வேளாண், உழவர் நலத்துறை சார்பில், தமிழ்நாடு வேளாண் பல்கலையில் இப்பயிற்சி நடத்தப்பட்டது. பல்கலை தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப இயக்குநர் செந்தில் தலைமை வகித்தார்.

பாப்பரை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து சிறுதானியங்கள் துறை பேராசிரியர் சிவக்குமார், குலசாகை சாகுபடி குறித்து பேராசிரியர் வைத்தியலிங்கம், கினோவா சாகுபடி குறித்து பேராசிரியர் ஐயப்பன் ஆகியோர் விளக்கமளித்தனர். இதில், 50 விவசாயிகள், 40 வேளாண் விரிவாக்க அலுவலர்கள் பங்கேற்றனர்.

பயிர்களின் சாகுபடி தொழில்நுட்பங்கள், ஊட்டச்சத்து முக்கியத்துவம், மண் மற்றும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ற சாகுபடி முறைகள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்கள், மதிப்புகூட்டல்,மாற்று பயிர்சாகுபடி விரிவடைதல், கூடுதல் வருமான வாய்ப்பு குறித்து விளக்கப்பட்டது.

நிகழ்வில், வேளாண் இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, ஸ்டாமின் இயக்குனர் சங்கரலிங்கம், துணை இயக்குனர்கள் விஜயகல்பனா, நிர்மலா, வேளாண் அலுவலர் ரகுமத்நிசா ஆகியோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us