/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்களிடம் சுற்றுலா செலவினங்கள் கணக்கெடுப்பு புள்ளியியல் அலுவலர்களுக்கு பயிற்சி துவக்கம்
/
மக்களிடம் சுற்றுலா செலவினங்கள் கணக்கெடுப்பு புள்ளியியல் அலுவலர்களுக்கு பயிற்சி துவக்கம்
மக்களிடம் சுற்றுலா செலவினங்கள் கணக்கெடுப்பு புள்ளியியல் அலுவலர்களுக்கு பயிற்சி துவக்கம்
மக்களிடம் சுற்றுலா செலவினங்கள் கணக்கெடுப்பு புள்ளியியல் அலுவலர்களுக்கு பயிற்சி துவக்கம்
ADDED : ஜூன் 23, 2025 11:49 PM

கோவை; சுற்றுலா செலவினங்களை மையமாகக் கொண்டு, மக்களிடம் கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக, 13 மாவட்டங்களை சேர்ந்த, 100 புள்ளியியல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
புள்ளியில் விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய புள்ளியியல் துறை, தமிழ்நாடு மாநில பொருளாதார மற்றும் புள்ளியியல் இயக்குனரகம் சார்பில் ஜூலை, 1 முதல் அடுத்தாண்டு ஜூன், 30 வரை சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
உள்நாட்டு சுற்றுலா செலவினங்களை மையமாகக் கொண்டு புள்ளியியல் துறை சார்ந்த அலுவலர்கள் நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்துகின்றனர். மக்களின் பயணங்கள், செலவினங்கள் உள்ளிட்டவை அடங்கிய தரவுகள் சேகரிக்கப்படும்.
இதில், உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மேற்கு மண்டல தேசிய புள்ளியியல் அலுவலகம் (களப்பணி பிரிவு) சார்பில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உட்பட, 13 மாவட்ட அலுவலர்களுக்கு மூன்று நாள் பயிற்சி முகாம், கோவை ராம்நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று துவங்கியது. புள்ளியியல் துறை உதவி இயக்குனர் சசிக்குமார், மூத்த அதிகாரி ரவிச்சந்திரன், இணை இயக்குனர் வினீஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
நாளை வரை நடக்கும் இம்முகாமில், 100 புள்ளியியல் அலுவலர்களுக்கு, துறை சார்ந்த அதிகாரிகள் பயிற்சி அளிக்கின்றனர்.
மூத்த புள்ளியியல் அதிகாரி அபிலாஷ் கூறுகையில்,''மாவட்டம் முழுவதும் 'ரேண்டம்' ஆக புள்ளியியல் அலுவலர்கள், 80வது சுற்றாக தரவுகள் சேகரிக்க உள்ளனர். அலுவலகம், வர்த்தகம் என அனைத்து பிரிவுகளிலும் சுற்றுலா பயணம், உணவு, தங்கும் வசதி உள்ளிட்டவற்றுக்கான செலவினம் குறித்த தகவல் சேகரிக்கப்படும்.
இதன் அடிப்படையில், சுற்றுலா துறையை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது; உள் கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது,'' என்றார்.