/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலையில் பயிற்சி தர்றாங்க! விவசாயிகள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்
/
வேளாண் பல்கலையில் பயிற்சி தர்றாங்க! விவசாயிகள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்
வேளாண் பல்கலையில் பயிற்சி தர்றாங்க! விவசாயிகள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்
வேளாண் பல்கலையில் பயிற்சி தர்றாங்க! விவசாயிகள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : அக் 27, 2025 09:59 PM
பொள்ளாச்சி: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் இலவச பயிற்சிகளும், பல்கலை துறைகள் வழங்கும் வழக்கமான கட்டண பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. வரும் வாரத்தில் துவங்கும் பயிற்சிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விதை உற்பத்தியாளர்: விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, விதை மையம் வாயிலாக, தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், 'நீங்களும் ஆகலாம் தரமான விதை உற்பத்தியாளர்' என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 9952176477 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். 26 நாட்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
விதைத்தேர்வு, சுத்திகரிப்பு, பயிர் பராமரிப்பு முறைகள், சான்றிதழ் பெறும் நடைமுறைகள், விதை சேமிப்பு மற்றும் விற்பனை வழிமுறைகள் வழங்கப்படும். 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மண்புழு உரம்: உழவியல் துறை சார்பில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 26 நாட்களுக்கு இலவச திறன் சார் மண்புழு உரம் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வரும் 30ம் தேதி துவங்கி, நவ., 28ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி, டிப்ளமோ படித்த விவசாயிகள், பெண்கள் பங்கேற்கலாம். வயது வரம்பு 18 முதல் 35 வரை. இன்று, 28ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். 9443209452, 9842562975 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை.
மசாலா பொடி, ஊறுகாய்: இன்று 28, நாளை 29ம் தேதிகளில், மசாலா பொடி, ஊறுகாய்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. சாம்பார் பொடி, ரசப்பொடி, கறிமசால் பொடி, பருப்பு பொடி, சிக்கன் 65 பொடி, ரெடிமேட் மிக்ஸ், காளான் ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய், பாகற்காய் ஊறுகாய், கத்திரிக்காய் ஊறுகாய், வெங்காய ஊறுகாய் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டணம் ரூ.1,770. மேலும் விவரங்களுக்கு அறுவடைபின் சார் தொழில்நுட்ப மையத்தை 94885 18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அறிவிக்கப்பட்டுள்ளது.

